ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான மாணவிகள்: திருமானூரில் பாஜக சார்பில் நேரில் பாராட்டு…

21 July 2021, 6:31 pm
Quick Share

அரியலூர்: ரஷ்யாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு தேர்வான மாணவிகளுக்கு திருமானூரில் பாஜக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ. இவர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நடைப்பெற்ற வானவியல் ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் பாஜக சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி திருமானூரில் இன்று நடைப்பெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் இரண்டு மாணவிகளின் வீட்டிற்கும் நேரில் சென்று சால்வை அணிவித்து, பரிசு பெட்டகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கபட்டது. மேலும் அடுத்து நடைப்பெற உள்ள 6 கட்ட போட்டிகளிலும் வெற்றிபெற்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டு கொள்ளபட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் ஐயாரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Views: - 90

0

0