புதிய கல்விக் கொள்கை நகலை எரித்து ஆர்ப்பாட்டம்…

5 August 2020, 4:17 pm
Quick Share

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பினர் கல்வித்துறை முன்பு புதிய கல்விக் கொள்கை நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பாஜக அரசின் பாசிச கொள்கையை எதிர்த்தும், மாணவர்களின் வாழ்வாதாரத்தை புதை குழியில் தள்ளும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், உடனடியாக இந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பினர் கல்வித் துறையை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 நகலை தீயிட்டுக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 6

0

0