நகைக்காக மூதாட்டி கொலை: உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை

11 October 2020, 5:49 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை அடுத்துள்ள சங்கிலியாண்டபுரம், நாகம்மை தெருமை சேர்ந்தவர் ஆனந்தி. இவர் தனிமையில் வசித்து வந்தார். எப்போது காலையின் எழுந்து தண்ணீர் பிடிக்க வருவது வழக்கம். ஆனால் இன்று வர வில்லை. மேலும், வீடு காலை வெகு நேரமாகியும் திறக்கப்பட ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது ஆனந்தி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த ஆய்வாளர் சகாயராஜ் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், கை, கால்கள் கட்டப்பட்டு மூதாட்டி கொல்லப்பட்ட நிலையில், அவர் அணிந்திருந்த தங்க தோடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 31

0

0