திடீரென மயங்கி விழுந்த முதியவர் மரணம்: மதுரையில் சோக சம்பவம்…!!

Author: kavin kumar
18 February 2022, 5:48 pm
Quick Share

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடை வீதியில் வேலை செய்து கொண்டு இருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளாங்கோவில் கடைதெருவில் கணேசன் (60) என்று அழைக்கப்படுபவர் சுமார் இருபது வருடங்களாக பள்ளாங் கோவில் கடைவீதியில் உள்ள கடைகளில் வேலை பார்த்து வருகின்றார். இவர் இன்று காலை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கி பார்க்கும் போது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.


இந்நிலையில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் விரைந்து வந்து ஊர் பெயர் தெரியாத ஆண் சடலத்தை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதனைக் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 315

0

0