தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீர் தீ விபத்து: தீயை அணைத்ததால் தப்பிய இரண்டு லட்ச ரொக்கம்

Author: Udayaraman
4 August 2021, 8:39 pm
Quick Share

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் இரண்டு லட்ச ரொக்கம் தப்பியது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது ஏடிஎம் மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் திடீர் புகை வெளிவந்துள்ளது இதனை கண்ட ஏடிஎம் பாதுகாவலர் தீயணைப்பு நிலையம் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறிப்பட்டது. இத்தீவிபத்தில் 8ஆயிரம் மதிப்புள்ள மின்சார கேபிள்கள்,ஏசி பொருட்கள் ஆகியவை கருகியது.தீ கட்டுப்படுத்தப்பட்டதால் ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 2லட்ச ரூபாய் தப்பியது.

Views: - 136

0

0