நூற்பாலையில் திடீர் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் சேதம்…

Author: kavin kumar
22 August 2021, 6:29 pm
Quick Share

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் சேதம் அடைந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் அக்ரஹார புத்தூரில் திருப்பூரைச் சேர்ந்த மணியன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்மாவட்ட மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் இருந்த போது நூற்பாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து ஆலை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில்,

பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தில் சுமார் 12 டன் பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 427

0

0