அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து..

Author: kavin kumar
11 October 2021, 1:29 pm
Quick Share

சென்னை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் , திடீரென அட்மினிஸ்ட்ரேஷன் A பிளாக் பகுதியில் மின்சார அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வண்ணாரப்பேட்டை தீயணைப்பு படையினர் 20 க்கும் மேற்பட்ட இரண்டு வண்டிகளில் விரைந்து வந்து 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பான் கருவி மூலம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் வந்தனர். துரித நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 102

0

0