வெல்டிங் ஒர்க் ஷாப்பில் திடீர் தீ : ஒரு மணி நேரம் கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு!!

12 February 2021, 5:45 pm
Sathy Fire - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் சத்தியமங்கலம் – கோவை சாலையில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

இன்று உரிமையாளர் முனுசாமியின் சொந்த பணி காரணமாக வெளியே சென்றதால் இன்று அவரது ஒர்க் ஷாப் திறக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ள லாரி பணிமனையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிலர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் பொதுமக்கள் மற்றும் லாரி பணிமனையில் வேலை பார்ப்போர் இணைந்து குடங்களில் தண்ணீர் ஊற்றியும் மண்களை அல்லி நெருப்பின் மீது வீசியும் தீயை அணைத்தனர்.

இறுதியாக வந்த தீயணைப்பு துறையினர் சிறிது சிறிதாக எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைத்து சென்றனர். சத்தியமங்கலம் கோவை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0