திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை: ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் மற்றும் அழுகிய மீன்கள் ஆகியவற்றை பறிமுதல்
Author: kavin kumar14 August 2021, 3:56 pm
திண்டுக்கல்: திண்டுக்கல் மீன் மார்கெட்டில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் 500 கிலோ மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த அழுகிய மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞானம் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சிவராம் பாண்டியன் தலைமையில் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் 500 கிலோ மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த அழுகிய மீன்கள் கண்டறியபட்டு மீன்களை கைபற்றினர். தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்ய வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மீன் மார்கெட்டில் உள்ள பல கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மீன்கள் விற்பனை செய்வதை கண்டு கடை உரிமையாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், ஜாபர், சரவணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
0
0