மின்விசிறியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

Author: kavin kumar
10 August 2021, 4:57 pm
Quick Share

சென்னை: சென்னையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொடுங்கையூர் ஆர். ஆர். நகர் 4 வது தெருவில் பெற்றோருடன் வசித்து வந்தவர் ஸ்டீபன். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு இதுவரை திருமணம் ஆக வில்லை. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியின் ஊக்கில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று வீடு திரும்பிய ஸ்டீபனின் பெற்றோர் ஸ்டீபன் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு ஸ்டீபன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 194

0

0