கொரோனாவில் குணமடைந்தவர்களுக்கு இனி இரண்டு வாரங்களுக்கு பிறகே சம்மரி..!

17 September 2020, 9:25 pm
Quick Share

கோவை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை இரண்டு வாரங்களுக்கு பிறகே டிஸ்சார்ஜ் சம்மரி வழங்க மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நாரயணபாபு கூறுகையில், ”கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.

எனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கவும், அதன்பிறகே டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றார். இந்த ஆய்வின் போது, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.