தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

17 May 2021, 2:29 pm
Quick Share

தூத்துக்குடி: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு  ரூ.16.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி, தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் நிறுவன இயக்குனர் மோகன் சி லாசரஸ்  வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவி பொருட்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவன இயக்குனர் மோகன் சி லாசரஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 40

0

0