திமுகவின் பிரச்சாரத்தை தடுப்பதால் ஆதரவு பெருகும்: காதர் மொய்தீன் பேட்டி

21 November 2020, 5:23 pm
Quick Share

திருச்சி: அதிமுக அரசு திமுகவின் பிரச்சாரத்தை தடுப்பதால் ஆதரவு பெருகும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

திருச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் நிஜாம் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:- உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் கலந்துகொண்ட கூட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அது குறித்து ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தடுப்பதால் திமுகவிற்கு தான் ஆதரவு பெருகும். அதிமுக அடாவடி தினத்திற்கு எதிராக வெறுப்பு உண்டாகும்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் எங்களுக்கு இல்லை, எத்தனை இடங்கள் கொடுத்தாலும் அதனை பேசி தீர்ப்போம். எங்களது கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி அவர்களும் எங்களை விடுவதாக இல்லை. அமித்ஷாவை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு எந்தவித பயமுமில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக தேவையில்லை. பாஜக செய்ய வேண்டிய வேலையை அதிமுக செய்து வருகிறது. அதிமுகவே ஒரு பாஜகதான். அதிமுக வாக்குகளை பெற வேண்டுமென்றால், தொடர்ந்து அமித்ஷா பேச்சை கேட்க கூடாது என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0