சுயேட்சையாக போட்டியிடும் திமுக எம்எல்ஏ ஆதரவாளர் : திருக்கோவிலூரில் பரபரப்பு…

Author: kavin kumar
3 February 2022, 5:53 pm

கள்ளக்குறிச்சி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகி சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், 23 இடங்களில் திமுகவும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் போட்டியிடுகின்றன. ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தீவிர ஆதரவாளரும் திமுகவின் இளைஞரணி பொறுப்பில் உள்ள முக்கிய பிரமுகர் டி.பூபதி (46). இவர் நகர்ப்புற உள்ளாட்சி திமுக சார்பில் 14 வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்,

வசந்தம் கார்த்திகேயன் தீவிர விசுவாசியாக பூபதி இருப்பதால் அமைச்சர் பொன்முடி தரப்பில் பூபதிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் தனது ஆதரவாளர்களுடன் சுயேட்சையாக திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செந்தில்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுகவில் சீட்டு மறுக்கப்பட்டு திமுகவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ததால் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது,

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!