குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்: நீரை வெளியேற்றும் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

24 November 2020, 10:35 pm
Quick Share

திருவள்ளூர்: நிவர் புயல் சின்னம் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்ததால் மோட்டார் என்ஜின் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் நிவர் புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்வாய்களை சீரமைத்து தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருவதை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைநீரை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து அகற்றும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பழவேற்காடு குப்பம் கடற்கரை கிராமத்தில் அலையின் சீற்றம் காரணமாக மீனவ கிராமத்தில் தண்ணீர் புகும் சூழல் உருவாகியுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக கரையோரப் பகுதிகளில் நிறுத்தியுள்ளனர் தொடர்ந்து கனமழை நீடித்தால் அவர்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0