25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள வாய்க்காலில் விழுந்து உயிர் தப்பிய வாலிபர்

2 November 2020, 9:50 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள வாய்காலில் விழுந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் புஷ்பராஜ் (23) தமிழரசன் (23) நண்பர்களான இருவரும் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி சுப நிகழ்சிகளுக்கு சமையல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வில்லியனூரில் இருக்கும் ஒரு கல்யான மண்டபத்தில் சமையல் வேலைகளை முடித்து விட்டு இரவு முதலியார் பேட்டையில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருமாத்தபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பாலத்தில் அமைக்கப்படிருந்த கட்டையில்,

இருசக்கர வாகனம் மோதி வாகனம் ஓட்டி வந்த புஷ்பராஜ் மேம்பாலத்தில் இருந்து 25 அடி கீழே உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். மேலும் தமிழரசன் பலத்த காயங்களுடன் அதே இடத்தில் விழுந்துள்ளார், அப்போது அவ்வழியே சென்றவர்கள் பாலத்தில் இருந்து கீழே விழுந்த புஷ்பராஜ் மற்றும் தமிழரசனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் புஷ்பராஜ்க்கு இடிப்பில் முறிவு ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிர் பிழைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Views: - 14

0

0