அழகர்கோயிலில் ஊரடங்கை மீறி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

2 August 2020, 3:29 pm
Quick Share

மதுரை: அழகர்கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஊரடங்கை மீறி ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியின்றியும் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அழகர்கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவில் நுழைவு வாசலில் சாமி தரிசனம் செய்தனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வு இல்லாத ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து தடை உத்தரவையும் மீறி மொட்டையடித்தும், சமூக இடைவெளியின்றியும் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இங்கு அதிகளவு பக்தர்கள் வருவதால், தடை உத்தரவை மீறி பூக்கடை, உணவகம், துணிக்கடைகள், திண்பண்ட கடைகள் என அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் இருக்கும் அப்பன்திருப்பதி காவல்துறையினர் ஊரங்கை மீறி மக்கள் கூடுவது குறித்தும், கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

Views: - 24

0

0