தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம் …!

4 February 2021, 6:32 pm
Quick Share

கன்னியாகுமரி: குளச்சல் அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமானது குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்துள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகள் சந்தியா .சந்தியாவிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முட்டம் பகுதியை சேர்ந்த ஜான் ஜியோ என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 15 -ந்தேதி உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை கவனிக்க கோடிமுனை வந்த சந்தியா கடந்த 15 நாட்களாக தனது தாயாரை கவனித்து வந்துள்ளார் .

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா தன்னுடைய கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிசங்கிலி மற்றும் அரை பவுன் கம்மலை கழற்றி வைத்துவிட்டு திடீரென மாயமாகி உள்ளார். திருமணம் நடந்து முடிந்து நான்கு மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இச்சம்பவம் குறித்து குளச்சல் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0