நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி

12 September 2020, 6:53 pm
Quick Share

திருவாரூர்: நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், சட்டரீதியாக நடவடிக்கையினால் இன்று நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- இந்தப் பருவத்தில் மட்டும் 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை அதிகபட்ச கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்திற்கு தேவையில்லை என்பது உறுதியான நிலைப்பாடு பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளை தேர்வை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால் மாணவ-மாணவிகள் இதேபோன்று நிலைக்கு ஆளாகி கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டுமே தவிர இதுபோன்ற முடிவுகளை எடுக்க கூடாது என்பதுதான் எங்களுடைய அன்பான வேண்டுகோள். ஓஎன்ஜிசி பொருத்தவர பழைய திட்டம் செயல்படும் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது. இதுதான் மாநில அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0