உர விலை ஏற்றத்தை தடுத்திட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு

19 April 2021, 3:26 pm
Quick Share

திருச்சி: உர விலை ஏற்றத்தை தடுத்திட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர். அம் மனுவில், விவசாயத்தில் உரங்கள் ஒவ்வொன்றிலும் தழைசத்து, மணிசத்து, சாம்பல் சத்து, கந்தகசத்து என அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசானது மானியம் வழங்கி வருகிறது. உரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயரும் போது உரம் தயாரிக்க கூடிய நிறுவனங்கள் தானாகவே விலையை ஒவ்வொரு வருடமும் உயர்த்திக் கொண்டே வருகிறது. 50கிலோ மூட்டை அடங்கிய உரம் 1,400 ரூபாயிலிருந்து இன்று 1950ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே இதே நிலை நீடித்தால் விவசாயிகள் உரத்தை வாங்கி பயிர் செய்யும் நிலைமை கேள்விக்குறி ஆகிவிடும் எனவே, மத்திய அரசானது உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முறையான மானியத்தை வழங்க வேண்டும், விலை உயர்வை அரசு நிர்ணயிக்க வேண்டும்,
மேலும், தமிழக அரசு இந்த விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Views: - 41

0

0