அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!!

18 August 2020, 1:34 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின் அதீத கனமழை பெய்து வந்தது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் சொல்லும்படியாக இல்லை.

இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலா (நீலகிரி) 5 செ.மீ. மழையும், பந்தலூர் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

வடக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பலத்த காற்று வீசக்கூடும். எனவே, அந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 29

0

0