எதுகை மோனையில் பேசி மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

5 September 2020, 10:27 pm
Quick Share

மதுரை: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதுகை மோனையாக பேசி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாஎர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு PPE KIT மற்றும் N95 முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்கு மணியிடம் வழங்கினார். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
பொருளாதார தேவை, மக்களின் வாழ்வாதாரத்திற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகளை அல்லாத நாட்களை போன்ற ஒத்துழைப்பை கொடுத்தால் மட்டுமே மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியும்.

மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். பொருளாதார தேவைகளுக்காகத் தான் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் கொரோனாவை விரைவில் விரட்டி அடிக்க முடியும். தமிழகத்திற்கு நிதி தேவை என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசிடம் விலியுறுத்தி வருகிறோம் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பசி என்கின்ற வார்த்தை எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக மக்களின் உயிர் பிரச்சனையில் மக்களை கை கழுவ சொன்ன அரசு மக்களை அரசு கை கழுவி விட்டது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுவது முறையற்றது. முக ஸ்டாலின் எதுகை மோனையாக பேசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின்.முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்ட கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவர் மீதும் மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மு.ஸ்டாலின் எதுகை மோனையில் பேசி அசைத்து பார்க்க முயற்சிக்கிறார் என்றார்.

Views: - 0

0

0