செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்பது எழுந்துள்ள விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார்

Author: Udhayakumar Raman
22 July 2021, 7:30 pm
Quick Share

புதுச்சேரி: முக்கிய பிரமுகர்களின் செல்போஃன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுகேட்பதாக எழுந்துள்ள விவகாரத்தை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மத்திய அரசு முக்கிய பிரமுகர்களின் செல்போஃன் உரையாடல்களை ஒட்டுகேட்ப்பதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸார் அந்தந்த மாநில ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் சட்டபேரவை அருகே வந்த போது போலிசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 366

0

0