முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சிய அலுவலகத்தில் தர்ணா..!
Author: kavin kumar6 October 2021, 8:18 pm
கோவை: முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை வைத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி திமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டப்பன் நகரில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் ஏற்கனவே வீடு நிலம் உள்ளவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு பட்டா வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளாக வந்து மனு அளித்துச் செல்கின்றனர்.அதன்படி, மொத்தம் 38 பட்டாக்கள் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பது உதவியாளரை தொடர்ந்து அந்த பட்டா பதிவை ரத்து செய்யக்கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.அப்போது மக்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்த பன்னீர் செல்வம் என்பவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் மிரட்டியதாக தெரிகிறது இதனால் அங்கு ரகளை ஏற்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் திமுக உறுப்பினர்கள் என்றும்,தங்களுக்கே நியாயம் கிடைப்பதில்லை என்றும் கூறி திமுக உறுப்பினர் அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
0
0