ஆட்சியர் அறிவித்த புதிய ஊதியத்தை வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Author: kavin kumar
19 August 2021, 2:29 pm
Quick Share

அரியலூர்: அரியலூரில் ஆட்சியர் அறிவித்த புதிய ஊதியத்தை வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக 235 ரூபாயை கணக்கிட்டு மாதமாதம் ஊதியம் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உயர்த்தி அறிவித்த சம்பளத்தை வழங்காமல் பழைய ஊதியத்தையே வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் திருச்சியில் உள்ள தொழிலாளர்கள் நல ஆணையத்தில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் 3 ஆண்டுகள் வழங்காத மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த 292 ரூபாய் ஊதியத்தை கடந்த ஜீலை மாதத்தில் இருந்து அமல்படுத்தபடும் என நகராட்சி அலுவலர்கள் ஒப்பு கொண்ட நிலையில் பழைய ஊதியம் 235 ரூபாயே வழங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் உயர்த்தி அறிவித்த சம்பளத்தை வழங்கக்கோரி பணிக்கு செல்லாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 174

0

0