இரண்டு மாத ஊதியத்தை வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Author: Udhayakumar Raman
1 July 2021, 4:57 pm
Quick Share

நீலகிரி: உதகை நகராட்சியில் பணிபுரியும் 170க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் இன்றுவரை வழங்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுமார் 170 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறி உதகை நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் கொடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கூறியபோது போராட்டத்தைக் கைவிட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று வரை சம்பளம் வழங்கப்படாததால் மீண்டும் இன்று அதிகாலை முதலே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகமானது உடனடியாக சம்பளத் தொகையை தர வேண்டும் தவறும் பட்சத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். கோஷங்கள் எழுப்பி தரையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்திவரும் தூய்மை பணியாளர்களால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 97

0

0