டாஸ்மாக் மதுபானத்தில் குப்பை:வாங்கிய குடிமகன் அதிர்ச்சி

24 June 2021, 9:30 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் அருகே டாஸ்மாக் ஒன்றில் வாங்கப்பட்ட மதுபானத்தில் குப்பைகள் இருந்துள்ளதை கண்டு குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் படையப்பா என்கிற செல்வராஜ். இவர் இன்று தனது நண்பருடன் கயர்லாபாத் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்றுள்ளார். தனக்கும் தனது நண்பர்களுக்கும் மதுபானத்தை வாங்கிக்கொண்டு, ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து பார்த்தபோது திறக்கப்படாத பாட்டிலுக்குள் ஏதோ கருப்பாக உருண்டையாக தென்பட செல்வராஜ் விற்பனையாளரிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது கடை விற்பனையாளர் வேறுபாட்டில் வாங்கிச் செல்லவும் எனக் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொரோனா காலத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பொதுமக்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடையில் மதுபானத்தில் அசுத்தம் கலந்து விற்பனை செய்வது மது பிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 115

0

0