தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் மலர்விழி தகவல்

18 September 2020, 6:34 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற வரும் 21ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு நடப்பாண்டில் வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களும் விவசாய மின் இணைப்பு பெறலாம். 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 7.5 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 10 குதிரை திறனுள்ள மின் மோட்டார்களுக்கு 3 லட்ச ரூபாயும், 15 குதிரை திறனுள்ள மின் மோட்டாருக்கு ரூபாய் 4 லட்ச ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0