மகனுக்கு மருத்துவ உதவி கோரி அமைச்சரிடம் கண்ணீர் மல்க பெற்றோர் கோரிக்கை

Author: kavin kumar
26 October 2021, 7:54 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூருக்கு ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வசம் தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 8 வயது சிறுவன் கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்தது பொதுமக்களை நெகிழச் செய்தது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை இயக்குனர் சாந்தி ஆகியோருடன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சரிடம் கடம்பத்தூர் ஒன்றியம் ராமன் கோவில் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் சென்ற கூலித் தொழிலாளி அவரது மனைவி ஜெனிபர் இவருடன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வசதியின்றி அவதியுற்று வரும் 8 வயது சிறுவன் ஹரிகிருஷ்ணன் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுமாறு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனுடன் வந்து கோரிக்கை மனு அளித்தார். சென்னையில் தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் நான்காம் வகுப்பு பயின்று வரும் எட்டு வயது சிறுவன் ஹரிகிருஷ்ணன் தாய் ஜெனிபரின் கல்லீரலை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க உதவி செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

Views: - 239

0

0