புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம்

19 September 2020, 2:14 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்கள் திறக்கப்பட்டதையடுத்து கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது.

பக்தர்களின் வேண்டுகோளை அடுத்து ஜூன் மாதம் 8-ம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது. இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலையிலேயே காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் வில்லியனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் முதல் புரட்டாசி சனிக்கிழமையான இன்று திறக்கப்பட்ட கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இருந்தாலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.