வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச பெருவிழா

28 January 2021, 1:28 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சின்னகாவனம் அருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச பெருவிழாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவிலேயே பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்ன காவனத்தில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூசவிழா நடை நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி வள்ளலார் அன்பர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். வள்ளலாரின் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு அகவல் பாராயணம் ஓதினர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச திருநாளில் விமரிசையாக விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவே பங்கேற்றனர்.

Views: - 0

0

0