தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமி வாக்களிப்பு

6 April 2021, 2:28 pm
Quick Share

கிருஷ்ணகிரி: பர்கூர் சட்டமன்ற தொகுதியில் தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி தனது சொந்த கிராமமான சிந்தகம்பள்ளி கிராமத்தில் பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மேலவை உறுப்பினருமான தம்பிதுரை அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல்முன்னாள் அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி தனது சொந்த ஊரான காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக்குமார் பெரியார் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்

Views: - 41

0

0