பல்பு ஸ்டாக் தொட்டியை சுத்தம் செய்த 4 ஊழியர்கள் மயக்கம்

Author: Udhayakumar Raman
29 June 2021, 5:31 pm
Quick Share

நெல்லை: வடுகன் பட்டியில் உள்ள சுபம் பேப்பர் மில்லில் 20 அடி ஆழம் உள்ள பல்பு ஸ்டாக் தொட்டியை சுத்தம் செய்த 4 ஊழியர்கள் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வடுகன் பட்டியில் உள்ள சுபம் பேப்பர் மில் உள்ளது. இங்கு உள்ள 20 அடி ஆழம் கொண்ட பல்பு ஸ்டாக் தொட்டியினை சுத்தம் செய்வதற்காக எந்தவித பாதுகாப்பு கவசமும் அணியாமல் இறங்கிய கல்லூரை சேர்ந்த மாரியப்பன், அரியநாயகிபுரம் செல்லப்பா, சேரன்மகாதேவி ராஜா, பழவூர் காளிமுத்து ஆகியோர் ஆக்சிஜன் கிடைக்காமல் தொட்டி உள்ளேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக நான்கு பேரையும் மற்ற ஊழியர்கள் காப்பாற்றி பாளை வெங்கடேஸ்வரா மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Views: - 93

0

0