இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவருக்கு நடந்த விபரீதம்…

16 August 2020, 5:44 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றவர் வாகன ஓட்டி கழுத்தை நெரித்து, கடுமையாக தாக்கி செல்போன், ரூ.19,500 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து மர்மநபர்கள் தப்பி சென்ற சம்பவம் பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சமையலர் அஸ்லம் பாஷா. இவர் இன்று வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டு உள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சிறிது தூரம் சென்றவுடன் பின்னால் அமர்ந்து இருந்த நபர் அஸ்லம் பாஷா கழுத்தை நெரித்து வாகனத்தை ஓரம் நிறுத்தியுள்ளார்.

பின்னர் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அஸ்லம் பாஷாவை சரமாரியாக தாக்கி மயங்கிய பின்னர் ஆடையை கிழித்து அவரிடமிருந்த ரூ.19500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு அவரை சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு அங்கிரந்து தப்பி சென்று மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தை மட்டும் அருகில் உள்ள ஒரு கடை முன்பாக நிறுத்தி விட்டு தப்பி உள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அஸ்லம்பாஷா மயக்கம் தெளிந்த பின்னர் அவரே எழுந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தகவலின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 26

0

0