மழைநீர் தேங்கி இருந்த குட்டையில் தவறி விழுந்து வாலிபர் பலி

1 December 2020, 3:31 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியிருந்த குட்டையில் தவறி விழுந்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் மகன் சரவண பெருமாள் (25). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதியில் சலவைத் துறையில் மழைநிர் தேங்கிக் கிடந்த குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Views: - 16

0

0