பெண் கதற கதற பலாத்காரம் செய்து கொடூர கொலை..!

12 September 2020, 4:16 pm
Quick Share

தூத்துக்குடி: ஏரல் அருகே பலாத்காரம்  செய்யப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி செங்கமலம் (47). இந்த தம்பதியருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கணேசன் மரணம் அடைந்து விட்டார். பின்னர் அவரது தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருட்ன் செங்கமலம் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில், முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட  எஸ்பி ஜெயகுமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷசன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொடூர கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Views: - 0

0

0