சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

24 November 2020, 9:56 pm
Quick Share

ஈரோடு: கொடுமுடி அருகே நடந்த சாலையின் ஓரமாக உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து காரில் பயணித்த 4பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள பள்ளக்காட்டூர் என்ற இடத்தில் , பெருந்துறையில் இருந்து கரூர் நோக்கி மாருதி காரில் நான்கு நபர்கள் சென்று கொண்டிருந்தனர். பள்ளக்காட்டூர் அருகே எதிர்பாராத விதமாக சாலையில் ஓராத்தில் உள்ள பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் பெருந்துயை சேர்ந்த ரகு, ஆனந்த், தாமோதரன் மற்றும் மணி என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நான்கு நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0