தமிழ்மொழியை அளிக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது: வன்னியரசு குற்றச்சாட்டு

30 November 2020, 11:16 pm
Quick Share

தருமபுரி: பொதிகை சேனலில் 15 நிமிடம் சமஸ்கிருதம் ஒளிபரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழை அழிக்கும் முயற்சியில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல் புகாரில் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யவும், இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்த பின்பே நீதியரசர் கலையரசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,

டிடி பொதிகை சேனலில் சமஸ்கிருதம் 15 நிமிடம் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த போக்கு தமிழ்மொழியை அளிக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழ் மொழியை சிதைப்பதற்கு மத்திய அரசு சமஸ்கிருதத்தை திணிக்கிறன, இந்த போக்கு கண்டிக்கத்தக்கது எனவும் நடிகர் ரஜினிகாந்த கட்சி ஆரம்பிப்பதாக 2017ல் இருந்து தொடர்ந்து சொல்லிக் கொண்டேதான் வருகிறார் – இனியும் சொல்லிக் கொண்டே தான் இருப்பார் என்றார்.

Views: - 0

0

0