பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு முதல்வர், அமைச்சர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

Author: Udhayakumar Raman
21 October 2021, 2:51 pm
Quick Share

புதுச்சேரி: பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணையா உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி காவல்துறை சார்பில், கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காவலர் நினைவு துாணில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணையா, ஏடிஜிபி அனந்தமோகன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Views: - 162

0

0