10ம் தேதி மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…
7 August 2020, 8:57 pmஈரோடு: 10ம் தேதி மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும்நவம்பர் மாதம் பள்ளி திறப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பூசாரியூரில் 82 விவசாயிகளுக்கு கரவைமாடுகள் மற்றும் இளங்கன்று வளர்ப்பிற்கு 67.30 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளைபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பின்போது, நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்திற்கு முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நவம்பரில் பள்ளி திறப்பது என்பது தவறானது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை பெற்றோர் மனநிலை அறிந்து ஒருநாள் தாக்கம் குறைந்த பின் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.
ஆன்லைன் வகுப்பு கண்துடைப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்று கேட்டபோது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு வரும் 19-ம் தேதி வழங்கப்பட உள்ளது இதன் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு மாத கால ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது.பத்தாம் தேதி மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.