பிறந்தநாளுக்கு தந்தையுடன் துணி எடுக்க சென்ற குழந்தை கார் மோதி உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
16 September 2021, 3:33 pm
Quick Share

சென்னை: புத்தாடை உடுத்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக புதுத்துணி எடுக்க தந்தையுடன் தி.நகருக்கு சென்ற 3 வயது பெண் குழந்தை கார் மோதி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கிறது.

ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் துணி சலவை செய்யும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் பார்கவ் என்ற மகனும் சாய் தன்ஷிகா என்ற மூன்று வயது மகளும் இருந்தனர். மகள் தன்சிகாவிற்கு அடுத்த மாதம் நாலாம் தேதி 4 ஆவது பிறந்த தினம் வருகிறது. இதை முன்னிட்டு மகளின் பிறந்த நாளுக்காக புது துணி எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இரண்டு பிள்ளைகள் மனைவியையும் அழைத்துக்கொண்டு தி.நகர் சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் பைக்கை இடித்து தள்ளியிருக்கிறது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்து இருக்கின்றனர். இதில் 3 பேருக்கும் பலத்த அடிபட்ட அவர் தலையில் குழந்தை தன்சிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

அப்பகுதியினர் ஓடிவந்து காரில் வந்தவரை பிடித்து இழுத்து அடித்து இருக்கிறார்கள். அவர்தான் 4 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்திருக்கிறது. நேற்று குழந்தை தன்சிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜெயராமனிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்ட உடனே ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். ஆனால் குழந்தை உயிரிழந்ததும் மீண்டும் அவரை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் விபத்தின்போது காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் காவல்துறை தற்போது கைது செய்திருப்பது வேறு ஒரு நபர் என்று ஜெயராமன் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.

Views: - 56

0

0