வாக்கு எந்திரம் பாதுகாப்பு கட்டிடத்தை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

7 November 2020, 7:06 pm
Quick Share

திருவள்ளூர்: 5.5 கோடி மதிப்பீட்டில் ஓராண்டாக கட்டப்பட்டு வரும் வாக்கு எந்திரம் பாதுகாப்பு கட்டிடத்தை ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் சுமார்‌ 16000 சதுர அடியில் 5.5 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி பூமி பூஜை போடப்பட்டது .கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர் புண்ணியகோட்டி, ஒப்பந்ததாரர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

பணிகளை விரைந்து முடிக்க கோரி ஆட்சியர் பொன்னையா வலியுறுத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர்,‌ திருவொற்றியூர், ஆவடி, மதுரவாயல், பூவிருந்தவல்லி, திருத்தணி, கும்முடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான 19,254 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவை இங்கு வைத்து தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

Views: - 16

0

0