பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

6 August 2020, 11:13 pm
Quick Share

அரியலூர்; கொரோனாவை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மருத்துவ முகாம்கள் மூலம் கண்காணிப்பது, கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா கேட்டு கொண்டுள்ளார்.