எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்த ஆட்சியர்

1 December 2020, 3:45 pm
Quick Share

விருதுநகர்: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் உறுதி மொழி ஏற்றார்.

இன்று உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கண்ணன் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பின்பு எய்ட்ஸ் நோய்யால் பாதிக்கப்பட்டவர் களை வேறுபாடின்றி ஆதரிப்போம் என அரசுத்துறை அதிகாரிகள் முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்னண் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவ ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Views: - 12

0

0