சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
Author: kavin kumar2 October 2021, 4:54 pm
விருதுநகர்: விருதுநகரில் ராம் கோசிமிண்ட் தொழிற்சாலையின் சார்பாக ரூ.9 லட்சத்தி 57 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.9 லட்சத்தி 57 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். விருதுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ஒன்றும் வெளியே வளாகத்தினுள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒன்றும் என மொத்தம் இரண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சுமார் ரூ. 9 லட்த்தி 57 ஆயிரம் மதிப்பீட்டில் ஆர் ஆர் நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை சார்பில் வழங்கப்பட்டது. இதனை பயன்பாட்டிற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் பணிபுரியும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் இன்று தொடங்கி வைத்தார்.
0
0