தமிழகத்தில் இனிவரும் காலம் பா.ஜ.க வின் காலம் தான்.! வானதி சீனிவாசன் பேட்டி

27 November 2020, 7:23 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவின் மகள் திருமண வரவேற்பு இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மகளீரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;- மோடி அரசு பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ள நிலையில் அந்தத் திட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று பெண்களிடம் விளக்கிக் கூறி அவர்களை கட்சியில் ஈடுபடுத்தும் பணியை பாஜக மகளிரணி மேற்கொண்டு வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் தண்டிப்பதற்கு போக்சோ சட்டம் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் , பணியிடங்களில் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கு தனி குழு அமைக்க வேண்டும் என மோடி அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசு ஊடகங்கள் உள்ளிட்டவை இணைந்துதான் பெண்கள் மீதான பிரச்சனைகளை தடுக்க முடியும். தமிழகத்தில் பெண்களுக்கு என தனி காவல்நிலையம் ,நீதிமன்றம் செயல்பட்டாலும், பெண்களுக்கான நியாயம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் உள்ளது போன்று தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ,தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போட்டியாக காங்கிரஸ் கட்சி இருந்த காலம் போய் அவ்விடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் பாஜக அதற்கான காலம் என்கிற நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குடும்ப அரசியலில் இருந்து தமிழகத்தை விடுவிப்பது தான் தங்கள் கட்சியின் நோக்கம் . வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிரச்சனையின் போது சத்தம்போடும் கனிமொழி ,ஸ்டாலின் ,உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களின் கட்சிக்குள் பூங்கோதை பெரும் பிரச்சனையால் அவதிப் பட்டிருக்கிறார் .

அப்படிப்பட்ட கட்சியை நம்பி தமிழக பெண்கள் போகக்கூடாது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் பெரிய அளவில் இல்லை. அவ்வாறு பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல் யாத்திரைக்கு தானாக வரும் கூட்டத்தை பார்த்தால், வரும் காலம் பா.ஜ.க.,வின் காலமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 17

0

0