கொங்கு நாடு விவகாரம்: மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கும் வரை போராட்டம்..!

10 July 2021, 4:57 pm
Quick Share

கோவை: கொங்குநாடு என்ற பெயரில் புதிய யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு அமைக்க உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவினர் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இன்றைய தினமலர் நாளிதழில் கொங்குநாடு என்ற தலைப்பில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மேற்கு மாவட்டங்களை இணைத்து தனி பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதோடு, ஒரு சாரர் எதிர்ப்பும், ஒரு சாரர் ஆதரவும் தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழலில், கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., தொண்டர்கள் தினமலர் செய்தித்தாளை எரித்து ஆர்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக, இந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கோவை மாவட்ட மதிமுக.,வினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, கோவை ஈச்சனாரி அருகே போராட்டத்தை துவக்கியுள்ளனர். மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுகவினரும், அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருவதை பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற முருகனின் சுய விபர ஆவணத்தில் சொந்த ஊர் என் குறிப்பிட வேண்டிய இடத்தில் கொங்கு நாடு என குறிப்பிட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தினமலரில் வெளியான கொங்கு நாடு செய்தி திமுக.,வினரையும், அதன் தோழமை கட்சிகளிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

Views: - 160

0

0