கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழப்பு

16 November 2020, 6:14 pm
Quick Share

நீலகிரி: உதகை அருகே மசக்கல் கிராமத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் இங்கு காட்டு மாடு, சிறுத்தை ,புலி, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் கிராமப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது குடியிருப்பை நோக்கி வனவிலங்குகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உதகை அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் மசக்கல் எனும் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிணற்றில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்டினர்.

Views: - 19

0

0