தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

18 June 2021, 1:30 pm
Quick Share

அரியலூர்: திருமானூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரமணசரஸ்வதி பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைப்பெற்றுவரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன்படி புள்ளம்பாடி கிளை வாய்கால்களான சுள்ளங்குடி வாய்கால், வெங்கனூர் மற்றும் கரைவெட்டி ஆண்டி ஒடை வாய்கால் உள்ளிட்ட 10 வாய்கால்களில் 1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் வாய்கால்களை தூர்வாருவது மட்டுமல்லாமல் அப்போதே ஆக்ரமிப்புகளையும் அகற்றவேண்டும் என வலியுறுத்தினார். இல்லையென்றால் பேரிடர் காலங்களில் பட்டா நில உரிமையாளர்கள் பாதிக்கபடுவார்கள் என்றும் இனி தூர்வாரும் பணியின் போதே ஆக்ரமிப்புகளையும் முறையாக அகற்றிட வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார். இதில் நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 130

0

0