அரசு பேருந்தை உடைத்து சேதப்படுத்திய திமுகவினர்

20 November 2020, 10:41 pm
Quick Share

திருச்சி: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது சாலையில் சென்று கொண்டு இருந்த அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாருர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் போலீசார் கைது செய்தது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை முன்பு திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் 200க்கு மேற்பட்டோர் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் சாலையில் நின்று கொண்டுருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை திமுகவினர் உடைத்து சேதப்படுத்தினர்.

மேலும் சாலைகளில் சென்று கொண்டு இருந்த பேருந்துகளை தாக்கவும் முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, போலீசாருக்கும், திமுகாவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 1

0

0